2025 மே 20, செவ்வாய்க்கிழமை

ஆடுகளைத் திருடிய மூவர்; சி.சி.டி.வி கமெராவால் சிக்கினர்

Editorial   / 2017 நவம்பர் 09 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

மட்டக்களப்பு, அமிர்தகழி பிரதேசத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஆடுகள் இரண்டை, முச்சக்கரவண்டியில் திருடிச் சென்ற 3 திருடர்கள், திருட்டுப்போய்  24 மணித்தியாலயத்துக்குள் சி.சி.டி.வி கமெராவின் உதவியுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் வைத்து நேற்று (08)  இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், திருட்டுப்போன ஆடுகளையும் முச்சக்கரவண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அமிர்தகழி கண்ணகி அம்மன் வீதியில் உள்ள ஆட்டுப்பட்டியில் உள்ள ஆடுகளை மேச்சலுக்காகத் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், கண்ணகி அம்மன் கோவில் பகுதியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்துள்ளன.

இந்நிலையில், அப்பகுதிக்கு வந்த முச்சக்கரவண்டியொன்று, அங்கு நீண்ட நேரம் நிறுத்தியிருந்துள்ளது. இதனையடுத்தே, ஆடுகளும் திருட்டுப்போயுள்ளன. ஆட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை அடிப்டையாக வைத்து, துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், அப்பகுதியில் இருந்த வீடொன்றின் சி.சி.டி.வி கமெராவை சோதனையிட்டபோது, அதில் முச்சக்கரவண்டியின் காட்சி பதிவாகியுள்ளது.

முச்சக்கரவண்டியின் உரிமையாளர், கல்முனை சவளக்கடை பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர் என அறிய வந்ததமையடுத்து, அங்கு சென்று, முச்சக்கரவண்டி தெடர்பில் விசாரித்துள்ளனர்.

 குறித்த முச்சக்கர வண்டியை, மருதமுனையைச் சேர்ந்த உறவினர் ஒருவர் வாடகைக்குக் கொண்டு சென்றதாக தெரியவந்ததையடுத்து, மருதமுனை சேர்ந்த இருவர், மட்க்களப்பு - வெல்லாவெளி வைக்கியல்லை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

ஆடுகள், இறைச்சி அறுக்கும் தொழுவத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X