2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆரம்ப பாடசாலைகள் ஆரம்பம்; 70 சதவீதமான மாணவர்கள் வருகை

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஒலுமுதீன் கியாஸ், ரீ.எல்.ஜவ்பர்கான்,தீஷான் அஹமட், எம்.எஸ்.எம். ஹனீபா

சுமார் ஆறு மாதங்களின் பின்னர் ஐந்தாம் ஆண்டு வரையான ஆரம்ப பாடசாலைகள், நாடளாவிய ரீதியில் இன்று (25) திறக்கப்பட்டன

இதன்படி, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட ஆரம்ப பாடசாலை மாணவர்கள், சுகாதார நடைமுறைகளைப் பேணி மிகவும் ஆர்வத்துடன் வருகை தந்தனர்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்தில் 15 ஆரம்ப வகுப்பு பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.எம்.கலாவுதீன் தெரிவித்தார்.

70 சதவீத்துக்கும் அதிகமான மாணவர்கள் வருகை தந்திருந்ததாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.

கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரிவுக்குட்பட்ட 66 பாடசாலைகளில் ஆரம்ப பிரிவுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. இங்கும் மாணவர்களின் வரவு 65 - 75 சதவீதத்துக்கு இடைப்பட்டிருந்ததாகவும் அதிபர்கள் தெரிவித்தனர்.

பெரும்பாலும் எல்லாப் பாடசாலைகளிலும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களின் வரவு நூறுவீதம் இருந்ததாகவும் அதிபர்கள் தெரிவித்தனர்.

மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட ஆரம்பப் பிரிவு பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளும் இன்று ஆரம்பமாகின.

அம்பாறை மாவட்டத்திலுள்ள அம்பாறை, அக்கரைப்பற்று, திருக்கோவில், கல்முனை, சம்மாந்துறை ஆகிய வலய கல்வி அலுவலகங்களுக்குட்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப பிரிவு வகுப்புகள் கல்வி நடவடிக்கைக்காக மீள ஆரம்பிக்கப்பட்டன.

வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளிகளைப்பேணி, முகக் கவசங்களை அணிந்திருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

பெரும்பாலான பாடசாலைகளில் பொலிஸார் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததை காண முடிந்தது.        


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .