Editorial / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 02:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, அப்துல்சலாம் யாசீம்
2020ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண பொதுச் சேவை உத்தியோகஸ்தர்களின் வருடாந்த இடமாற்றம் தொடர்பில் மேன்முறையீடுகளை, இம்மாதம் 16ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக அறிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றம் வழங்குவது தொடர்பாகக் கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கு இடமாற்ற சபையால் சிபாரிசு செய்யப்பட்ட இடமாற்றப் பட்டியல் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அறிவித்துள்ளார்.
இவ்விடமாற்றமான 01.01.2020ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்பதையும், மேன்மறையீடுகள் தொடர்பான இறுதித் தீர்மானங்கள் அனைத்தும் அறியத்தரப்படுமெனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.
கால தாமதமாகக் கிடைக்கப்பெறும் மேன்முறையீடுகள் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விவரம் அடங்கிய சுற்றுநிரூபம், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல அமைச்சுகளின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிள் ஒரு நிலையத்தில் தொடர்ச்சியாக பல வருடங்களாக சேவையாற்றிவருகின்ற அரச முகாமைத்துவ உதவியாளர் சேவை, அபிவிருத்தி உத்தியோகஸ்தர், மொழி பெயர்ப்பாளர் சேவை, சாரதிகள் சேவை, அலுவலகப் பணியாளர் சேவை, தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் சேவை, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியாளர் சேவை என்பவற்றைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களே இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
12 minute ago
14 minute ago
35 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
35 minute ago
1 hours ago