Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஜனவரி 07 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
'எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது, அரசாங்கத்தை மாற்றுகின்ற தேர்தலோ அல்லது ஆட்சியைக் கவிழ்க்கின்ற தேர்தலோ அல்ல' என, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி நகரசபைத் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளரின் அலுவலகத்தை,இன்று (07) திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
'1977ஆம் ஆண்டுக்குப் பின்னர், மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொகுதிவாரித் தேர்தல் முறை குறித்து, மக்கள் மத்தியில் போதியளவு தெளிவில்லாத நிலைமை காணப்படுகின்றது. இந்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு மாத்திரமே, இப்பகுதி மக்கள் வாக்களிக்க முடியும். அவரே இத்தொகுதியின் அபிவிருத்திக்குப் பொறுப்பாகவும் இருப்பார்.
'மேலும், இப்பகுதியில் நாங்கள் பரந்தளவில் சேவை செய்துள்ளோம். இருப்பினும், மேலும் பல தேவைகள் உள்ளன. அவற்றுக்கான தீர்வுகளும் அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.
'உள்ளூராட்சிமன்றத் தேர்தலானது, ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவையோ அல்லது என்னையோ வீழ்த்துகின்ற தேர்தல் அல்ல. மாறாக, உங்கள் பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் அடிப்படைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற சபையின் தேர்தலாகும்.
'இந்தச் சபையின் உறுப்பினராக வருபவர், மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றவராக, சிறப்பான முறையில் இயங்க வேண்டுமானால், அதற்கான நிதியை அரசாங்கமே வழங்க வேண்டும்.
'எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியின் கீழ் போட்டியிடுகின்றவர்களுக்கு ஆதரவு வழங்குவதன் ஊடாகவே, தமது பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும்.
'அதிகாரத்திலுள்ளவர்களுக்கு அப்பால், வேறு ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம், தமது தேவைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago