Freelancer / 2021 ஜூலை 01 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இந்து ஆலயங்களில் வழக்கமான பூஜைகள், பிரார்த்தனைகள் மற்றும் ஆலய திருவிழாக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையினருடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் மாவட்ட செயலக ஊடகப்பிரிவிற்கு தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொவிட் நிலையினை கருத்திற்கொண்டு இந்து ஆலயங்களில் வழமையாக இடம்பெறும் நித்திய பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளை அதிகபட்சமாக ஐந்து பேருடன் நடத்தலாமென்றும், வருடாந்த திருவிழாக்களை பொது மக்களது பங்குபற்றுதலுடன் நடத்த முடியாதெனவும், அதிகபட்சமாக 15 ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் குறித்த பகுதிக்கான சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் நடாத்துவதற்கு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அனுமதியளித்துள்ளார் என செயலாளர் கே.கருணாகரன் இதன்போது தெரிவித்துள்ளார்.
M
13 minute ago
27 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
27 minute ago
3 hours ago
4 hours ago