2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

இரு சிறுமிகளை சித்திரவதைக்குட்படுத்திய சிற்றன்னை கைது

Suganthini Ratnam   / 2016 ஜூன் 02 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சகோதரிகளாகிய சிறுமிகள் இருவரை சித்திரவதைக்கு உட்படுத்தி வந்ததாகக்; கூறப்படும் அச்சிறுமிகளின் சிற்றன்னையை (வயது 48) மட்டக்களப்பு, ஏறாவூர் நகரில் புதன்கிழமை (01) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

எட்டு மற்றும் பத்து வயதுகளையுடைய இந்தச் சிறுமிகள் இருவரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளுக்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது.  

இதனை அடுத்து, இச்சிறுமிகள் வசித்துவந்த ஏறாவூர் நகரில் உள்ள வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், சிறுமிகளைப் பரிசோதித்தபோது அவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தமைக்கான உடற்தழும்புகள் காணப்பட்டன.
இந்நிலையில், இந்தச் சிறுமிகள் இருவரும் மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

'மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக தங்களின் தாய் சென்றுள்ளார். இதேவேளை, தந்தை பொலன்னறுவையில் அவரது தாயாருடன் வசித்து வருகின்றார்.  தாய் மத்திய கிழக்கு நாட்டுக்குச் செல்லும்போது, தங்களை அவரது தங்கையான தமது சிற்றன்னையிடம்; ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

தங்களின் பராமரிப்பாளராக இருந்துவந்த தாயின் சகோதரியும் மற்றும் அவரது உறவினர்களும் தொடர்ந்து தங்களை சித்திரவதைக்கு உட்படுத்தி வந்ததாக அச்சிறுமிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும், இந்தச் சிறுமிகள் நீண்டகாலமாக பாடசாலைக்கு அனுப்பப்படவில்லை என்பதும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X