2025 மே 22, வியாழக்கிழமை

இரு சந்தேகநபர்களுக்கு பிணை: நால்வருக்கு மறியல் நீடிப்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 14 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏறாவூரில் இடம்பெற்ற தாய், மகள் இரட்டைப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

ஏறாவூர்  முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த  நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது  மகள் மாஹீர் ஜெனீராபானு (வயது 32) ஆகியோர்,  கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இரட்டைக் கொலை தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (12) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ஆறு சந்தேகநபர்களில் ஏறாவூரைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் மற்றும் அபூபக்கர் முஹம்மது பிலால் ஆகிய இரு சந்தேகநபர்களுக்கும், மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற  நீதிபதி எம்.வை.இர்ஸதீன் முன்னிலையில், வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இவர்களிருவரையும் தலா இரண்டரை இலட்சம் ரூபாய் ரொக்கமும் இவ்விருவருக்கும் தலா ஒருவருக்கு இருவர் வீதம் ஐந்து இலட்சம் ரூபாய் சரீரப்பிணையிலும் இவர்களிருவரையும் பிணையில் செல்ல, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டர்.

அத்துடன், இவ்விருவரும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கையொப்படமிடல் வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டர்.

பிணை வழங்கப்பட்டுள்ள இஸ்மாயில் முஹம்மது பாஹிர் என்பவர்,  படுகொலை செய்யப்பட்ட ஜெனீரா பானுவின் கணவருடைய சகோதரராவார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஏனைய  அறுவரும், கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து, தொடர்ச்சியாக விளக்கமறியல்  இருந்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .