2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இரு விபத்துகளில் நால்வர் காயம்

வா.கிருஸ்ணா   / 2017 நவம்பர் 20 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற இரு விபத்துகளில் நால்வர் படுகாயமடைந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி இராமகிருஸ்ணமிசனுக்கு முன்பாகவுள்ள சந்தியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளொன்று, முச்சக்கர வண்டியொன்றை மோதியதால், முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற இருவரும் படுகாயமடைந்துள்ளனரென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேபோன்று, செட்டிபாளையம் மகா வித்தியாலயத்துக்கு முன்பாக மோட்டார் சைக்கிளொன்று, வீதியில் குறுக்காக சென்ற மாடு ஒன்றுடன் மோதியதன் காரணமாக இருவர் காயமடைந்துள்ளனர்.

வீதிகளில் திரியும்  கட்டாக்காலி  மாடுகளால் அண்மைக்காலமாக பல்வேறு விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள்தெரிவிக்கப்பட்டுள்ளன.

கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையெனவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X