2025 மே 08, வியாழக்கிழமை

இலங்கை தமிழரசுக்கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச கிளைக் கூட்டம்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  மண்முனை வடக்கு பிரதேச கிளைக் கூட்டமும் நிர்வாகசபைத் தெரிவும் மட்டக்களப்பு நகரிலுள்ள தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை நடைபெற்றது.

இதன்போது மண்முனை வடக்குப் பிரதேச கிளைத் தலைவராக எஸ்.தவராஜாவும் உப தலைவராக ஏ.கங்காதரனும் செயலாளராக சிவம் பாக்கியநாதனும் உப செயலாளராக பி.மனோகரனும் பொருளாளராக தி.சரவணபவனும் தெரிவுசெய்யப்பட்டனர்.

அத்துடன், நிர்வாக சபை உறுப்பினர்களாக ரி.சந்திரகுமார், திருமதி எம்.திருமாறன், ஆனந்த ஏ.ஜே.ராஜேந்திரம், திருமதி க.ஜெயப்பிரகாஸ், க.ரகுநாதன், க.ஜெயகரன், ஆ.பிரான்சிஸ், இ.இராஜரெட்ணம், ஆர்.கலைவேந்தன், சி.விஜயகுமார், சி.உமேஸ்காந்த ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து மக்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தும் வகையில் இக்கிளைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளுதல், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இக்குழு செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X