Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 06 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,நடராஜன் ஹரன், வி.சுகிர்தகுமார்
நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் 47,569 இளைஞர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் சுகத்ஹேவா விதாரண தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து 11 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக 109 இளைஞர்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இதில் அம்பாரை மாவட்டத்திலிருந்து 49 வேட்பாளர்களும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 32 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 28 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், அம்பாறை மாவட்டத்திலிருந்து 18,920 இளைஞர்களும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 18,607 இளைஞர்களும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 10,042 இளைஞர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் நான்கு தொகுதிகளுக்கு நான்கு பேரும் மற்றும் போனஸ் அடிப்படையில் ஒருவருமாக ஐந்து பேரும்; மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கு மூன்று பேரும் திருகோணமலை மாவட்;டத்தின் மூன்று தொகுதிகளுக்கு மூன்று பேருமாக 11 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாளை இடம்பெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு|ள்ளதாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி யூ.எல்.ஏ.மஜீத் தெரிவித்தார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
45 minute ago
1 hours ago