Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2020 மே 14 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, எஸ்.சபேசன், கனகராசா சரவணன்
இளம் ஊடகவியாளர் ஒருவர், மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லற்றில், நேற்று (13) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை, இன்ன காபர் வீதியைச் சேர்ந்த 21 வயது ரகுநாதன் மிதுன்சங்கர் எனும் இந்த ஊடகவியலாளர், வந்தாறுமூலையிலுள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்த நிலையில் இந்த அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது,
தனது சக ஊடகவியலாளர் ஒருவர் உட்பட மூவருடன் 2 மோட்டார் சைக்கிளில் நால்வரும் கல்லாற்றிலுள்ள நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, கோட்டைக்கல்லாறு நாகதம்பிரான் கோவிலுக்கு முன் வீதியோரமாக தரிது நின்றுள்ளனர். அங்கு பொருள்களை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரமொன்றும், மேற்படி ஊடகவியலாளர் நின்றிருந்த மோட்டார் சைக்கிளின் மீது பின்னால் மோதியதாக, விபத்தை நேரில் கண்ட, அவரது சக நண்பர்கள் தெரிவித்தனர்.
ஸ்தலத்துக்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு, உழவு இயந்திரத்தைக் கைப்பற்றி, அதன் சாரதியைக் கைது செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
37 minute ago
3 hours ago
4 hours ago