Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 23 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-துஷாரா
மட்டக்களப்பு,கிராமப் பகுதிகளில் இடம்பெற்று வரும் இளவயதுத் திருமணங்களைத் தடுக்கும் பொருட்டு தெருக்கூத்துக்களை நடாத்தி, கிராம மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருகின்றோம் என, மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் இன்று (23) தெரிவித்தார்.
மட்டக்களப்பு, வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள பாவற்கொடிச்சேனைக் கிராமத்தில், இளவயதுத் திருமணத்தைத் தடுக்கும் வகையில், கிராம மக்கள் முன்னிலையில் தெருக்கூத்து நிகழ்வுகளை நடாத்தியதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிராம மக்களின் உள்ளூர் புரிதலுக்கேற்ற வகையில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தெருக் கூத்து நாடக அணியினரின் மூலமே இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்து வருகின்றோம்.
இளவதில் வறுமை, கல்வியறிவின்மை, தாய்மார் சிறுமிகளை பராமரிப்பின்றி விட்டு வெளிநாடு செல்லுதல், வீட்டில் சிறுமிகளுக்குப் பாதுகாப்பின்மை, தாய் அல்லது தந்தையிடம் மட்டும் உள்ள பிள்ளைகள், கவனிப்பாரற்ற ,அரவணைப்பற்ற குடும்பத்திலுள்ள சிறுமிகள் போன்றோரே இளவயதுத் திருமணத்திற்கு ஆளாகி வருவதாக, பெண்கள் மற்றும் சிறுவர் பணி அதிகாரிகளும், சுகாதாரத் திணைக்கள அதிகாரிகளும் தெரிவித்ததை அடுத்து, இந்த இளவயதுத் திருமணங்களைத் தடுக்கும் வகையில் தெருக்கூத்துக்களை நடாத்தி கிராம மக்களுக்கு விழிப்புணர்வூட்டி வருவதாக, அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago