Janu / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கறுவாக்கேணி பிரதான வீதியில் அமைந்துள்ள வாகன சுத்திகரிப்பு நிலையத்திற்கு முன்னால் உள்ள மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவன் செவ்வாய்க்கிழமை (26) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
17 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இளைஞனின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .