2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இளைஞர் கைது; கேரளக் கஞ்சா மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 20 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் பிரதான வீதி – புகையிரத நிலைய வீதிச் சந்தியில் சனிக்கிழமை பிற்பகல், இளைஞன் ஒருவன் கைதுசெய்யப்பட்டபோது, அவரிடமிருந்து 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளக் கஞ்சாவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் பிரகாரம் சந்தேகத்துக்கிடமாக நடமாடிய 24 வயதுடைய குறித்த இளைஞனைக் கைது செய்து, அவரைப் பரியோதித்தபோது, அவர் கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இளைஞனிடமிருந்து 1,600 கிராம் கேரளக் கஞ்சாவை மீட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X