2025 மே 07, புதன்கிழமை

உணவு ஒவ்வாமையால் 25 மாணவர்கள் பாதிப்பு

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்,வடிவேல் சக்திவேல்,யோ.சேயோன்

மட்டக்களப்பு தாழங்குடா தேசிய  கல்வி கல்;லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்கள் 25 பேர் உணவு ஒவ்வாமையினால் திடீர் சுகயீனமுற்று ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் நேற்றிரவு(19.9.2015) 8 மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இக்கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் நேற்று முன்தினமிரவு(வெள்ளிக்கிழமை இரவு) உணவை உட்கொண்டுள்ளனர் அதன் பின்னரே இவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல், வாந்தி, மயக்கம், தலைசுற்று,வயிற்றோட்டம் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டே இம்மாணவர்கள் வைத்தியசாலைக்கு வந்துள்ளதாக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

21 பெண் ஆசிரியமாணவிகளும், 4 ஆண் ஆசிரிய மணவர்களுமே இவ்வாறு திடீர் சுகயீனமுற்றுள்ளனர்.
இந்த மாணவர்கள் நேற்று சனிக்கிழமை காலையிலேயே திடீர் சுகயீனமுற்ற போதிலும் அம்மாணவர்கள் நேற்றிரவு 8மணிக்குப்பின்னரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்கள் உட்கொண்ட உணவு ஒவ்வாமையினால் இவர்களுக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டதா என்பது தொடர்பாகவும் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் அங்கு அம்மாணவர்கள் உட் கொண்ட உணவுமாதிரியை பரிசோதனை செய்வதற்கு அவர்கள் உட் கொண்ட உணவு எதுவுமில்லையெனவும் அவர்கள் அருந்திய குடிநீரை பரிசோதனை செய்யவுள்ளதாகவும் குடிநீரின் மாதிரியை பொறளையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பவுள்ளதாகவும் ஆரையம்பதி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.பசீர் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X