2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உணவு ஒவ்வாமை; மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

Editorial   / 2017 நவம்பர் 27 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ்

ஏறாவூர் நகரிலுள்ள திருமண வீடொன்றில் வெள்ளிக்கிழமை பரிமாறப்பட்ட உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மலம், சலம் உட்பட பரிசோதிக்கப்பட வேண்டிய அனைத்து உணவு மாதிரிகளையும் தாம் கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சிப் பரிசோதனை நிலையத்துக்குக் கையளித்துள்ளதாக, பிரதேச சிரேஷ்ட மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம். புலேந்திரகுமார் தெரிவித்தார்.

அத்துடன், உணவை உட்கொண்டவர்களில் 5 சிறுவர்கள் உட்பட 8 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனரென, வைத்திய அத்தியட்சகர் பழீல் தெரிவித்தார்.

மேலும் 15 பேர், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையிலேயே தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X