Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
வா.கிருஸ்ணா / 2018 ஜனவரி 01 , பி.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில், நேற்று (31) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, உணவு விடுதியொன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், பல வர்த்தகர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுவருடத்தில் மண்முனைப்பற்று நகருக்கு வரும் மக்கள் சிறந்த சுத்தமான உணவுகளைப்பெறுவதற்கும் தரமான பொருட்களைக் கொள்வனவு செய்யும் வகையில், மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கே.ரமேஸ் தலைமையிலான குழுவினர், இந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஆரையம்பதி தொடக்கம் புதுக்குடியிருப்பு வரையிலான உணவு விடுதிகள்,பொதுச் சந்தைகள்,உணவு விற்பனை நிலையங்கள் இதன்போது சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
இதன்போது, தாழங்குடா பகுதியிலுள்ள உணவகமென்று, சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கக்கூடிய வகையில் இருந்ததன் காரணமாக, குறித்த உணவகம், வைத்திய அதிகாரிகளானால் சீல் வைக்கப்பட்டது.
அத்துடன், அங்கிருந்த பெருமளவு பாவனைக்குதவாத பொருட்களும் மீட்கப்பட்டதுடன், குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக மட்டக்களப்பு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .