Freelancer / 2023 பெப்ரவரி 27 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன ஊறணி பேச்சியமன் ஆலய உண்டியலை உடைத்து திருட முற்பட்ட இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு 11 மணியளவில் சின்ன ஊறணி பேச்சியமன் கோயிலில் சத்தம் கேட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த பகுதி மக்களை ஒன்றிணைத்து வந்த போது, உண்டியலை கல்லால் அடித்து உடைக்க முயற்சித்த ஒருவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் எனவும், இவருக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்கள் சுமத்தப்பட்டு, நீதிமன்ற பிணையில் வெளிவந்தவர் எனவும் இவரை ஞாயிற்றுக்கிழமை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இவரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். R
2 hours ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
03 Feb 2026