Janu / 2023 ஒக்டோபர் 30 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பிற்கு மனித பாவனைக்குதவாத பெரிய வெங்காயத்தை கனரக லொறிமூலம் எடுத்து வந்த ஒருவரை வியாழக்கிழமை (26) கைது செய்யப்பட்டதாக கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் குறித்த கனரக லொறி மடக்கிப் பிடிக்கப்பட்டு லொறியிலிருந்து மனித பாவனைக்குதவாத 40 மூடைகளைக் கொண்ட 960 கிலோ கிராம் பெரிய வெங்காயம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
சந்தேக நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுன் ஆறு மாத கால ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago