Princiya Dixci / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, இன்று (14) முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பிலுள்ள 14 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகரிகள் உட்பட பொலிஸ் அதிகாரிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை, மட்டக்களப்பு சுகாதார வைத்தியர் அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பாதுகாப்புப் படையினருக்கு கொவிட்-19 தடுப்பூசி எற்றும் நடவடிக்கையின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸாருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கடந்த வாரம் முதல் ஆரம்பிக்கப்பட்டு பகுதி, பகுதியாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதனடிப்படையில், இன்று கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு, தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago