Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 டிசெம்பர் 27 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கும்புறுமூலை கிராம சேவகர் பிரிவில் கும்புறுமூலை வெம்பு காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலத்தை அடையாளம் காண்பதற்கான தகவல்களை, வாழைச்சேனை பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 21.12.2017 அன்று, கும்புறுமூலை வெம்பு காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் கிடப்பதாக, கிராம சேவகர் எஸ்.அறியக்குட்டி மூலம் கிடைத்த தகவலையடுத்து, அவ்விடத்துக்குச் சென்ற வாழைச்சேனை பொலிஸார், சடலத்தை மீட்டனர்.
வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில், சடலத்தை பிரேத பரிசோதனைக்காகவும் மரணமடைந்தவர் யார் என்று அடையாளம் காணும்வரை பாதுகாப்பாக வைப்பதற்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
கண்டெடுக்கப்பட்டுள்ள சடலம், சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்றும் இவர் நீள நிறத்தில் கருப்புக் கோடிட்ட சாரம் அணிந்திருந்தர் எனவும் மீசை கட்டையாக வெட்டப்பட்டுள்ளதுடன், மெல்லிய தாடி வைத்திருப்பதாகவும் இவர் ஐம்பது வயது மதிக்கத்தக்கவராக உள்ளார் என்றும் வாழைச்சேனை குற்றத்தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி எல்.ஏ.விமலரத்ன தெரிவித்தார்.
சடலம், தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடனோ அல்லது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நேரடியாகவோ அல்லது 0652257709 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .