2025 மே 08, வியாழக்கிழமை

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சமூகத்தை நேசிப்பவர்களுக்கே சந்தர்ப்பம்: கே.யோகவேல்

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

சமூகத்தை நேசிப்பவர்களுக்கே உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இம்முறை வழங்கப்படுமென அக்கட்சியின் பிரதித் தலைவர் கே.யோகவேல் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக யாரை நிறுத்தவுள்ளதென இன்று ஞாயிற்றுக்கிழமை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'யுத்தத்தின் பின்னர் உள்ளூராட்சிமன்றங்களினதும்; மாகாணசபைகளினதும் அதிகாரப் பயன்பாடுகள் தொடர்பாக மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் நாங்கள் பாடம் கற்பித்தோம். மாகாணசபையினூடாக தமிழர்களின் அரசியல் அதிகார இருப்பை தக்கவைத்துக்கொண்டு அடுத்த கட்ட அரசியல் அதிகாரத்தை நோக்கிப் பயணிப்பது எவ்வாறு என்பது தொடர்பில் நடைமுறைச் சாத்தியமாக 2008 முதல் 2012ஆம் ஆண்டுவரை கிழக்கு மாகாணசபையில்   செயல்படுத்திக் காட்டியவர்கள் நாங்களே' என்றார்.

'மாகாணசபை முறைமை வேண்டாமென்று 2008 இல் தேர்தலை பகிஷ்கரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள், கிழக்கு மாகாணத்தையும் உள்ளூராட்சிமன்றங்களையும் நாம் ஆட்சி செய்து காட்டிய பின்னரே 2012 இல் தேர்தலில் முந்தியடித்துக்கொண்டு களம் இறங்கின.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் அதிக ஆசனங்களை பெற்று மாகாணசபையைக்; கைப்பற்;றி ஆட்சி அமைக்கக்கூடிய வாய்ப்பிருந்தும், அரசியல் சாணக்கியமின்மையால்; அந்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளது. ஆனால், வெறும் 07 ஆசனங்களைத் தக்கவைத்துக்கொண்டு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பதவி உட்பட ஆட்சி அதிகாரத்தை தன்னகப்படுத்தி ஆட்சி செய்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2008 இல் உள்ளூராட்சிமன்றங்களை பொறுப்பேற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்கள் ஆணையுடன் வீதிகள் அமைப்பது தொடக்கம் மயானங்களை பதிவு செய்வது வரை உள்ளூராட்சிமன்றத்தின் நிர்வாகச் செயற்பாடுகளை செவ்வனே நிறைவேற்றிக் காட்டியது. உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகளை உயிர்த்துடிப்புள்ளதாக மாற்றி மக்களுக்கு பயன் கிடைக்கச் செய்துள்ள பெருமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சாரும்' எனவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X