Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Sudharshini / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்
உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணையே வேண்டும் என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜோசப் பொன்னையா தெரிவித்தார்.
மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்ற உலக தொலைதொடர்பு தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தின் போதும் யுத்தத்தின் இறுதி காலங்களிலும் நந்தேறிய பேரவலம், துன்பறுத்தல்கள் மற்றும் கொடூரம் என்பவற்றிற்கு நீதி கிடைக்க வேண்டும். இதற்காக சர்வதேச விசாரணையே அவசியமாகும்.
இலங்கையில் நடைபெற்ற உள்ளக விசாரணைகள் ஆணைக்குழுக்களினால் எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் தான் நாம் சர்வததேச விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றோம்.
உள்ளக விசாரணைகளை நம்பமுடியாத நிலையில், எமது குரல் சர்வதேசத்திற்கும் ஜெனீவாவுக்கும் ஒலிக்க வேண்டும். அதற்காக நாம் அண்மையில் கையெழுத்துக்களை பெற்று அதை ஜெனீவாவுக்கும் சர்வேசத்திற்கும் அனுப்பினோம்.
பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீருக்கு தீர்வும் நியாயமும் கிடைக்க வேண்டும். இன்னும் தமிழ் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு விடுதலை கிடைக்க வேண்டும்.
உண்மை, அன்பு, நீதி என்பவற்றை இயேசு வலியுறுத்துகின்றார். அந்த நீதி வழங்கப்படல் வேண்டும். அந்த வகையில் நாம் இந்த உலக தொடர்பு தின விழாவில் சர்வதேச விசாரணை தேவை என்பதை வலியுறுத்துகின்றோம்.
தொலை தொடர்பு சாதனங்களின் வளர்ச்சியால் உலகில் எப்பகுதியில் எந்த சம்பவம் நடந்தாலும் அதை ஊடகங்கள் உடனேயே வெளியில் கொண்டு வருகின்றன. அந்தளவு ஊடகங்கள் வளர்ச்சி கண்டுள்ளன' என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago