Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 நவம்பர் 21 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
புல்மோட்டை முதல் பொத்துவில் வரையுள்ள பெரும்பான்மையான உள்ளுராட்சி மன்றங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்றும் என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் இன்று(21) தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்ததாவது,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனும் கட்சி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினூடாகவே வாக்கு கேட்கின்றனர்.
அமீர் அலிக்கோ, மஹ்ரூப்புக்கோ மக்கள் அளிக்கின்ற வாக்கு ஐக்கியத் தேசியக்கட்சிக்கு அளிக்கும் வாக்காகும். இதன்மூலம் முஸ்லிம்களுக்கு கிடைக்கின்ற நன்மை என்ன?
ஆனால், அவர்கள் தமக்கான இலாபங்களையே ஈட்டிக் கொள்வார்கள்.
அதேபோன்று தேசிய காங்கிரஸ் கட்சியினர் தமது வாக்குகளைப் பெற்று, மாயக்கல்லி மலையில் சிலைவைக்க முன்னின்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் வீரசேகர போன்றோருக்கே தாரை வார்க்கப் போகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கோ, அல்லது சுபைருக்கோ அளிக்கும் வாக்கு அக்கட்சியையே பலப்படுத்தும். அதனால் நம் சமூகத்துக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன?
ஆகவே, இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கின் பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளை வென்றெடுக்க முஸ்லிம்கள், முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசோ அல்லது தேசிய காங்கிரஸோ நமக்கு சவால் அல்ல என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.
மறைந்த தலைவர் மர்{ஹம் அஷ்ரப் அவர்களினால் எம் சமூகத்தின் விடுதலைக்காய் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து அதனைப் பலப்படுத்துவதற்கான கடமை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கின்றது.
கட்சியுடன் முரண்பாடுகள் இருக்கலாம் அவற்றை நாம் கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்;.
இப்போது நாட்டில் மிகவும் தீர்மானம்மிக்க தருணம் நாட்டின் முஸ்லிம்களின் எதிர்காலத்தையும் இருப்பையும் தீர்மானிப்பதற்கான அரசியல் யாப்பிற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆகவே, இந்தக்காலகட்டத்தில் முஸ்லிம்கள் தமது தனித்துவக் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.
இந்தக் கட்சி தனிப்பட்ட நபரினதோ, தனிப்பட்ட குழுவினரதோ கட்சி அல்ல. ஒட்டு மொத்த முஸ்லிம்களினதும் உரிமையை வென்றெடுப்பதற்கான ஒரேகட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸே என்பதை நாம் நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும்.
இந்தக் கட்சி தான் எமது சமூகத்தின் அடையாளம் அதற்காய் நாம் எந்தத் தியகத்தை செய்தேனும் கிழக்கில் நம் பலத்தை உலகிற்கு காட்ட முன்னின்று உழைக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
12 minute ago
15 minute ago
22 minute ago