2025 மே 26, திங்கட்கிழமை

உஷ்ணம் காரணமாக கல்விச் சுற்றுலாக்களை இடைநிறுத்தப் பணிப்பு

Suganthini Ratnam   / 2017 மே 09 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களினதும் கல்விச் சுற்றுலாக்களை இடைநிறுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன்

இது தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.நிஸாம் அறிவித்துள்ளார்.  

இதனை அடுத்து, சுற்றுலாக்களை இடைநிறுத்துமாறு சகல பாடசாலை அதிபர்களுக்கும் அவ்வவ் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் திங்கட்கிழமை (8) அறிவித்துள்ளார்கள்.

2017ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை மாணவர்களின் கல்வி நிகழ்ச்சிநிரல் திட்டத்தின் கீழ், பாடசாலைகளில் இரண்டாம் தவணைக் காலமானது சுற்றுலாக் காலமாகும்.

தற்போது நிலவும் உஷ்ணமான காலநிலை காரணமாக மாணவர்களை சுற்றுலாக்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்பதுடன், மறு அறிவித்தல்வரை சகல பாடசாலைகளினதும் சுற்றுலாக்களை இடைநிறுத்துமாறும் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களிடமும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X