2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு ஆங்கிலமொழிப் பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 23 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித், துசா

மட்டக்களப்பிலுள்ள  ஊடகவியலாளர்களுக்கு இலவசமாக 3 மாத கால  ஆங்கிலமொழிப்  பயிற்சிநெறி, கல்லடியிலுள்ள வொய்ஸ் ஒப் மீடியா நிறுவகத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை  பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.

இலங்கை பத்திரிகை ஸ்தாபானத்தின் ஏற்பாட்டின்; கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்படவுள்ள இப்பயிற்சிநெறியைத் தொடர விரும்புகின்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். ஊடகத்துறையில் ஆர்வமுள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எஸ்.வரதராஜன் தெரிவித்தார்.

விண்ணப்பப்படிவங்களை செயலாளர், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்,  6ஃ3, பழைய கல்முனை வீதி, மட்டக்களப்பு என்ற முகவரிக்கோ easternpressclub@gmail.com என்ற மின்னஞ்சலுக்கோ அனுப்ப முடியும்.

பயிற்சிநெறியைத் தொடர்ச்சியாகப் பூர்த்தி செய்து முடிப்பவர்களுக்கே  சான்றிதழ் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X