Freelancer / 2023 மார்ச் 10 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமங்களில் அண்மைக்காலமாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
யானை தாக்கி பல உயிர்கள் இழந்துள்ளதுடன், யானைகள் தொடர்ந்தும் பயிர் நிலங்களை துவம்சம் செய்வது வருகின்றன.
யானைகளின் தொல்லையால் குறித்த பகுதி மக்கள் தொடர்ந்தும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
இதனை பொதுமக்கள் பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மிலின் கவனத்துக்குகொண்டு வந்தபோது, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று யானை வெடிகளை வழங்க பிரதேச செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
அந்தவகையில், யானைகள் அதிகமாக நடாமாடும் இடங்களில் உள்ள நபர்களிடம் நேற்று வியாழக்கிழமை (09) யானை வெடிகள் கையளிக்கப்பட்டன.
210 சீ தியாவட்டவான் கிராம சேவை பிரிவின் கிராம உத்தியோகத்தர் எம்.எம். அன்வர் சதாத், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.எம். அரபாத் மற்றும் தொண்டர் அணியின் செயற்பாட்டாளர் ஹலீம் ஆகியோரின் பங்குபற்றுதளுடன் குறித்த நபர்களுக்கு யானை வெடிகள் வழங்கப்பட்டன. (N)

6 minute ago
25 Apr 2026
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
25 Apr 2026
25 Apr 2026