2025 ஒக்டோபர் 19, ஞாயிற்றுக்கிழமை

என்மீது பொய் வழக்கு: கௌரி குற்றச்சாட்டு

Editorial   / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத என்னை, கலந்துகொண்டதாக பொய்யான ஆதாரங்களை  உருவாக்கி கொண்டு எனக்கெதிராக வழக்கு தாக்கல் செய்த பொலிஸார் நீதித்துறையை தவறான பாதைக்கு கொண்டு செல்லுகின்ற படுபயங்கரமான நிலையே உள்ளது. எனவே, பொலிஸாரின் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்தவேண்டும் என பாதிக்கப்பட்ட சமூகசெயற்பாட்டளரான கௌரி கோரிக்கை விடுத்துள்ளனார்.

மட்டு மாநகரசபை முன்னாள் உறுப்பினரும் சமூகசெயற்பாட்டளரான கௌரி,   ஊடகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (29)  கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செங்கலடி பாடசாலைக்கு   கடந்த 8 ஆம் திகதி  வருகைதந்தார்.   அப்போது மட்டு மேச்சல்தரை மயிலத்தமடு மாதவனை பிரச்சனை தொடர்பாக ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் ஆர்ப்பாட்டம் கொம்மாந்துறை பகுதியில் நடைபெற்றது.

  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரது வீடுகளுக்கு சென்று பொலிஸார் வாக்கு மூலங்களை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்தில்  நான் கலந்துகொண்டதாகவும் தங்களிடம் அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் வாக்கு மூலம் ஒன்றை பெறவேண்டும் என   சனிக்கிழமை (28) எனது வீடு தேடிவந்த பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்

அதற்கு நான் வாக்கு மூலம் தரமுடியும் ஆனால், நான் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை அன்றை தினம் நான் வீட்டில் இருந்தமைக்கான  ஆதாரத்தை உறுதிபடுத்தியிருந்தேன். அதனை வாக்கு மூலத்தில் பதிவு செய்தால் நான் அதில் கையொப்பம் வைப்பேன். அதேவேளை நீதிமன்ற பிணை முறிபத்திரத்தில் கையெழுத்து இடமாட்டேன் என தெரிவித்தபோது அதற்கு பொலிஸார் உடன் பட்டநிலையில் வாக்கு மூலத்தை அளித்து அதில் என கையொப்பம் வைத்தேன். அதேவேளை, நீதிமன்ற பிணை முறிபத்திரத்தில் கையெழுத்து இடவில்லை

 பொலிஸாரின் செயற்பாடு  பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் மட்டக்களப்பில் ஒரு பயங்கரமான சூழ்நிலை ஏற்படுத்தியுள்ளதுடன் நீதிதுறையும் பொலிஸாரும் தங்களது கடமையை சரியாக செய்ய தவறியுள்ளனர்.

எனவே, ஒட்டுமொத்த நீதிதுறையும் தவறான ஒரு பாதையில் சென்றுக்கொண்டிருக்கின்றது.  இல்லாத ஒரு விடயத்தை உருவாக்குகின்றது. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஜனதிபதி உடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .