2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 18 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, கரவெட்டியிலுள்ள எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா செவ்வாய்க்கிழமை (17) மாலை கொண்டாடப்பட்டதாக அம்மன்றத் தலைவர் வேலாப்போடி கெங்காதரம் தெரிவித்தார்.

இவரது 100ஆவது பிறந்தநாளையொட்டி கரவெட்டி பலநோக்கு மண்டப வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவின்போது, இவரது உருவப்படத்துக்கு  மாலை அணிவிக்கப்பட்டதுடன், கேக் வெட்டப்பட்டு கொண்டாடப்பட்டது.

அத்துடன், 50 முதியோர்களுக்கு போர்வைத் துணிகள் அம்மன்றத்தால் வழங்கப்பட்டது. கடந்த வருடம் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற மாணவர்கள் மற்றும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில்  வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி பெற்ற மாணவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X