2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

எமது அமைப்பு அரசியல் கலப்படமற்றது:ஷயீட்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அரசியல் கலப்படமற்ற அமைப்பென அதன் தலைவர் ஏ.சி.எம்.ஷயீட்  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், 'ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பொதுச் செயலாளர் பதவியிலிருந்து எம்.ஐ.எல்.எம்.பழீல் திடீர் இராஜினாமா செய்துள்ளமை தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.

இந்த சம்மேளனம் அரசியல் கலப்படமற்ற ஓர் அமைப்பாக கடந்த காலத்தில் செயற்பட்டு வந்தமையைபோன்று  தற்போதும் செயற்படுகின்றது. எதிர்காலத்திலும் அதன் செயற்பாடுகள் அரசியல் சார்பற்றதாக அமையும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இந்த சம்மேளனம் ஏறாவூர் மக்களின் அனைத்து விடயங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்கும் அமைப்பாக செயற்படுவதினால், ஏறாவூரை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல்வாதிகளுடனும் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வுடன் செயலாற்றுகின்றது.

மேலும், எமது ஊர் நலன் சார்ந்த விடயங்களில் தீர்மானங்களை எடுத்துச் செயற்படுத்துவதில் எந்தவொரு அரசியல்வாதியின் தலையீடோ, அழுத்தமோ எமது சம்மேளனத்துக்கு இதுவரை ஏற்பட்டதில்லை.

வெவ்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சி ஆதரவாளர்களும் எமது சம்மேளனத்தில் அங்கம் வகிக்கின்றபோதிலும், அவர்களில் எவரும் தமது கட்சி சார்ந்த விடயங்களை சம்மேளனத் தீர்மானங்களினுள்  கொண்டுவந்து அழுத்தம் தருவதில்லை.

இதேவேளை, நிர்வாகக் குழுவிலுள்ள அதிகமானவர்கள் தங்களின் சொந்தத்தேவை சார்ந்த வேலைப்பளுக் காரணமாக நிர்வாகக்குழுவின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் முழுமையான ஒத்துழைப்பு வழங்காமையை  நான் ஏற்றுக்கொள்கின்றேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .