2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

எரிசாராய உற்பத்தி நிலைய நிர்மாணத்தை தடைசெய்யக் கோரி முறைப்பாடு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 26 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜவ்பர்கான்

கோறளைப்பற்றுப் பிரதேச சபைப் பிரிவுக்கு உட்பட்ட கல்குடாவெம்புப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும்  எரிசாராய உற்பத்தி நிலையத்துக்கான நிர்மாணப்  பணியை தடைசெய்யுமாறு கோரி கல்குடாப் பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (25) மாலை முறைப்பாடு செய்துள்ளதாகக் அப்பிரதேச சபைச் செயலாளர் எஸ்.எம்.ஷிஹாப்தீன் தெரிவித்தார்.

மேற்படி எரிசாராய உற்பத்தி நிலையத்தின்  நிர்மாணப் பணியை  இனிமேலும்; இடம்பெறாதவாறு நீதிமன்றத் தடையுத்தரவைப் பெறுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தனக்குப் பணித்திருந்தார்.  

இதன் அடிப்படையில் இம்முறைப்பாட்டைச் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X