2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஏறாவூரில் நவோதய வீடுகளும் நலனோம்புத் திட்டங்களும் கையளிப்பு

Editorial   / 2018 ஜூன் 26 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், கே.எலி.ரி.யுதாஜித்

ஏறாவூரில் நவோதய வீடுகளும் நலனோம்புத் திட்டங்களும், வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸாவால் கையளிக்கப்படவுள்ளனவென, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் கந்தையா ஜெகநாதன் தெரிவித்தார்.

ஏறாவூரில் எதிர்வரும் வியாழக்கிழமை (28) காலை 9 மணிக்கு இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், “ஸம் ஸம் கிராமம்”, “ஸகாத் கிராமம்” ஆகிய இரு மாதிரி எழுச்சிக் கிராமங்களில் 43 புதிய வீடுகளும், உட்கட்டமைப்பு வசதிகளான நீர், மின்சார வசதிகள், உள்ளகப் பாதை வசதி, பிரவேசப் பாதை வசதி ஆகியனவும் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன.

மேலும், 43 குடும்பங்களுக்கு வீடுகளுக்கான உரிமைப் பத்திரம், பயனாளிகள் 170 பேருக்கும் மொத்தமாக 85 இலட்சம் ரூபாய் வீடமைப்புக் கடன் மற்றும் உதவி வழங்கல், பயனாளிகள் 70 பேருக்கு “விசிரி” திட்டத்தின் கீழ், தலா ஒரு இலட்சம் ரூபாய் இலகு கடன்களுக்கான காசோலை வழங்கல், பயனாளிகள் 25 பேருக்கு “சொந்துருபியச” எனும் திட்டத்தின் கீழ், தலா 2 இலட்சம் ரூபாய் வீடமைப்புக் கடன் வழங்கல் என்பனவும் இடம்பெறவுள்ளன.

அத்துடன், 'சில்பசவிய' எனும் திட்டத்தின் கீழ், கட்டடத் தொழிலாளிப் பயிலுநர்கள் 50 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் உதவு தொகை வழங்குதல் மேலும் கண்பார்வைக் குறைபாடுள்ள 258 பேருக்கு இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கல், பயனாளிகள் இருவருக்கு, காணி உரிமைப்பத்திரம் வழங்கல் என்பனவும் இடம்பெறவுள்ளன என்று, தேசிய வீட்மைப்பு அப்விருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X