Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Princiya Dixci / 2021 ஜூலை 28 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர சபை நிர்வாகப் பிரிவில், நகர சபைக் கட்டளைச் சட்டம் 225இன் கீழ், 18 துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கு நகர சபை நிர்வாகம் தீர்மானித்திருப்பதாக, அந்நகர சபையின் செயலாளர் எம்.ஆர். ஷியாஹுல் ஹக் தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபையின் மாதாந்த அமர்வு, சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் தலைமையில், நகர சபை சபா மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்றது.
இதன்போதே, துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கு நகர சபை நிர்வாகம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நகர சபைப் பிரிவு வீதிகளில் காட்சி நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது பற்றிய துணை விதி, தங்குமிடங்கள் பொதுச் சுகாதார பாதுகாப்பு வசதிகளை முகாமைத்துவம் செய்தல்/ கட்டுப்படுத்துதல், உணவகங்கள் மற்றும் ஊறுவிளைவிக்கும் மற்றும் ஆபத்து மிக்க வியாபாரம் தொடர்பான துணைவிதி, தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் தொடர்பான துணை விதி உள்ளிட்ட 18 துணைச் சட்டங்களை உருவாக்குவதற்கே ஆலோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக ஏறாவூர் நகர சபைச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் சேர்க்கப்பட வேண்டிய பரிந்துரைகளோடு, தமது ஆலோசனைகளைச் சமர்ப்பிப்பதற்கும் ஏறாவூர் நகர உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago
11 May 2025