Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
பேரின்பராஜா சபேஷ் / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் பிரதேசத்துக்கான புதிய கல்விப் பணிப்பாளராக எம்.எம்.மௌஜுத் கடமையேற்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு, வலயக் கல்விப் பணிப்பாளர் டொக்டர் உமர் மௌலானா முன்னிலையில் நேற்று (19) நடைபெற்றது.
பிரதிக் கல்விப் பணிப்பாளர் றிப்கா இம்தியாஸ், சமாதானக் கல்வி, சமூக நல்லிணக்க இணைப்பாளர் எம்.ஜி.ஏ நாஸர், பாடசாலை அதிபர்கள் பலரும் இதன்போது பிரசன்னமாயிருந்தனர்.
ஏறாவூர் பிரதேசத்துக்கான முன்னைய கல்விப் பணிப்பாளர் சேகுதாவூத் றஸ்ஸாக் ஓய்வுபெற்றதையடுத்து, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான செய்யித் அஹமட் பின்னர் எம்.எச்.எம். நஸீர் ஆகியோர் பதில் பணிப்பாளர்களாக கடமையாற்றினர்.
இந்நிலையில், மாகாண கல்வித் திணைக்களத்தால் நடத்தப்பட்ட நேர்முகப் பரீட்சையில் பிரதேச கல்விப் பணிப்பாளர் மௌஜுத் தெரிவுசெய்யப்பட்டார்.
ஏறாவூர் பிரதேசத்தில் 18 பாடசாலைகள் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
54 minute ago
58 minute ago