Editorial / 2020 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர்ப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுப் பிரார்த்தனை நிகழ்வு, படுகொலை செய்யப்பட்டவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசலில், நினைவுப் பேரவையின் தலைவர் அல்ஹாஜ் எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில், இன்று (12) நடைபெற்றது.
1990ஆம் ஆண்டு, ஏறாவூர் நகரிலும் அதனை அண்டிய கிராமங்களிலும் ஒரே இரவில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தோர் மீது நடத்தப்பட்ட தாக்குலால் 121 பேர் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக, வருடாந்தம் 'ஏறாவூர்- ஸுஹதாக்கள் (சொர்க்கவாசிகள்) நினைவுப் பேரவையால் இந்நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் பிரார்த்தனை நிகழ்வுகளில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், மார்க்க அறிஞர்கள், சமூக சேவைச் செயற்பாட்டாளர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago