Princiya Dixci / 2021 ஜூலை 08 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடியில் முடக்கப்பட்டிருந்த எட்டு கிராம சேவகர் பிரிவுகளில் ஐந்து கிராமசேவகர் பிரிவுகள், இன்று (8) காலை 6 மணி முதல் விடுவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, காத்தான்குடியில் கடந்த மாதம் 23ஆம் திகதியன்று எட்டு கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டன.
இதில் காத்தான்குடி 4ஆம் குறிச்சி 164, காத்தான்குடி 5ஆம் குறிச்சி தெற்கு 164ஏ, காத்தான்குடி 5 தெற்கு 164பி, புதிய காத்தான்குடி கிழக்கு 162ஏ, காத்தான்குடி6 வடக்கு 162பி ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன.
விடுவிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்கள், இன்று காலை திறக்கப்பட்டதுடன், வழமையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதேவேளை, காத்தான்குடியில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன.
6 hours ago
9 hours ago
10 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
9 hours ago
10 Apr 2026