Freelancer / 2023 ஜனவரி 30 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 280 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இருவரை சனிக்கிழமை (28) மாலை கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாலையூற்று,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 23,மற்றும் 24 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் கிண்ணியா பாலத்தில் 280 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை வைத்திருந்த போதே கிண்ணியா போதைப் பொருள் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய கைது
செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்களை தடுத்துவைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். R
2 hours ago
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
03 Feb 2026