2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஐஸ் போதைப்பொருளை கடத்திய நபர் கைது

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூரிலிருந்து காத்தான்குடிக்கு ஐஸ் போதைப் பொருளை கடத்திய நபரை கைது செய்துள்ளதுடன், அந்நபரிடமிருந்து 10 கிராமும் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருளையும் மீட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி பொலிஸ் நிலைய விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் ஆலோசனைக்கமைய, குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகார் ரஹீமின் வழ்காட்டலில் விசேட பொலிஸ் குழுவினர், சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X