2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

ஒரே சூழில் நான்கு சிசுக்கள் பிரசவம்

Janu   / 2024 மே 22 , பி.ப. 02:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு போதனை வரலாற்றில் , இயற்கை முறையில் ஒரே  சூழில்  நான்கு சிசுக்களை பிரசவித்த முதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி  கலா ரஞ்சனி தெரிவித்தார் .

மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவை சேர்ந்த புது குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் கிருஷ்ணவேணி என்னும் 25 வயதுடைய தாய் ஒருவரே இவ்வாறு ஒரே  சூழில்  நான்கு சிசுக்களை பிரசவித்துள்ளார். இதில் மூன்று பெண் சிசுக்கள் மற்றும் ஒரு ஆண் சிசு அடங்கும்

கடந்த மாதம் ஐந்தாம் திகதி குறித்த சிசுக்கள் பிரசவமான போதிலும் அவற்றை மிகவும் பாதுகாப்பான முறையிலும் ஆரோக்கியமான முறையிலும் வளர்த்து 48 நாள் சிசுக்களாக குறித்த சிசுக்கள் ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டது .

ரீ.எல்.ஜவ்பர்கான்,எம். எஸ் .எம். நூர்தீன் ,கனகராசா சரவணன்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X