Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 நவம்பர் 19 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு - மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளத்தில் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவருடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 16ஆம் திகதி காலை கொழும்பில் இருந்து தனியார் பஸ் மூலம் காத்தான்குடிக்கு வந்து பின்னர் ஒல்லிக்குளம் சென்று வீட்டில் தனிமையில் இருந்த காத்தான்குடியை சேர்ந்த 38 வயதுப் பெண்ணுக்கே கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அன்று காலை பஸ்ஸில் இருந்து இறங்கிய மேற்படி பெண்ணை அழைத்துச் சென்று தனது வீட்டில் தங்கவைத்த மற்றுமொரு பெண்ணும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் அன்றைய தினம் கோவில்குளத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இந்த நிலையில், குறித்த ஆடைத்தொழிற்சாலையில் இந்தப் பெண்ணுடன் வேலை செய்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொதுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன், தொற்றுக்குள்ளான பெண்ணுடன் தொடர்புபட்ட 5 குடும்பங்களை காத்தான்குடி சுகாதர அலுவலப்பிரிவில் தனிமைப்படுத்தியுள்ளதுடன், மண்முனைப்பற்று சுகாதார அலுவலகப் பிரிவிலும் சில குடும்பங்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்தப் பெண் பயணித்த தனியார் பஸ்ஸின் சாரதி, நடத்துநர் ஆகியோரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago