2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஓட்டமாவடியில் அறுவருக்கு டெங்கு

Princiya Dixci   / 2017 ஜனவரி 22 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இம்மாதம் 1ஆம் திகதி முதல் கடந்த 20ஆம் திகதி வரை ஆறு பேர் டெங்கு நோயளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளதாக, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.நஜீப்கான் தெரிவித்தார்.

பெருகிவரும் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பல்வேறு வேலைத்திட்டங்களை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொது மக்களின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் நேற்றுச் சென்று டெங்கு நுளம்பினால் ஏற்படும் தாக்கம் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தியதுடன், டெங்கு குடம்பிகள் பெருகக்கூடிய பொருட்களும் அழிக்கப்பட்டன.

ஓட்டமாவடி மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் வேலைத்திட்தில், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி மூன்றாம் வட்டார கிராம அபிவிருத்தி சங்கம், ரேன்ஜஸ் விளையாட்டு கழகம் என்பவற்றின் அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X