Editorial / 2020 நவம்பர் 23 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 417 பேர் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளனர் எனவும் பெண்ணொருவர் மரணித்துள்ளார் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
அத்துடன், நவம்பர் மாதம் மாத்திரம் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெங்கைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகை விசிறல் நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர் தலைமையில், அதிக டெங்கு தாக்கம் காணப்படும் இடங்களிலுள்ள வீடுகளுக்கு டெங்கு புகை விசிறல் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
20 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago