2025 மே 08, வியாழக்கிழமை

ஓட்டோ விபத்து; சிறுவன் உயிரிழப்பு

கனகராசா சரவணன்   / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருக்கோவில் - அக்கரைப்பற்று பிரதானவீதி, தம்பட்டை பிரதேசத்தில், ஓட்டோவென்று வீதியை விட்டுவிலகி, மின்கம்பத்துடன் மோதி விபத்துக்கள்ளானதில் சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவம், இன்று (04) காலை இடம்பெற்றதாக, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் முதலாம் பிரிவு ஜே.பி. வீதியைச் சேர்ந்த 08 வயதுடைய சதீஸ்குமார் சஞ்சேயன் என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

திருமணவீடு ஒன்றுக்குச் சென்று திரும்புகையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் சிறுவனின் மாமா ஓட்டிச் சென்ற குறித்த ஓட்டோவில் சிறுவனின் தாயார், அம்மம்மா ஆகியோரும் பயணித்துள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தார்.

சடலம், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X