2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஓரினச்சேர்க்கை: பேக்கரி உரிமையாளர் கைது

Freelancer   / 2023 ஏப்ரல் 16 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன் 

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசதத்தில் இளைஞர் ஒருவருடன் ஒரினச் சேர்க்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பேக்கரி உரிமையாளரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான், சனிக்கிழமை (15) உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பேக்கரி உரிமையாளர் தனது பேக்கரி வேலைக்காக திருகோணமலையில் இருந்து 20 வயதான இளைஞன் ஒருவரை அழைத்து தனது விடுதியில் தங்கவைத்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு அந்தபகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரின் நடத்தையை அவதானித்து, 119 பொலிஸ் அவசர பிரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதையடுத்து குறித்த விடுதியையை சுற்றிவழைத்த பொலிஸார், பக்கரி உரிமையாளரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ததுடன் இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில்  சனிக்கழமை (15) ஆஜர்படுத்தியபோது அவரை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .