Suganthini Ratnam / 2017 ஜனவரி 23 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எஸ்.சபேசன்
மட்டக்களப்பு படுவான்கரை, கொக்கட்டிச்சோலையில் 1987ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மகிழடித்தீவு சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி அருகில் நடைபெறும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிப்பளைக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு த.தே.கூ. வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமை தாங்குகிறார்.
1987 ஐனவரி 28ஆம் திகதி இறால் பண்ணையில் தொழில் புரிந்த 23 பேரும் மேலும் அன்றைய தினத்திலிருந்து 3 நாட்கள் இடம்பெற்ற விசேட அதிரடிப்படையின் நடவடிக்கையில் சுமார் 63 பேரும் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இந்த நினைவுதின நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு, தீப வணக்கமும் நடைபெறவுள்ளதுடன், அத்துடன், இவர்களின் ஆத்ம சாந்திக்காக ஆலயங்களில் விசேட பூஜைகளும் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
41 minute ago
41 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
41 minute ago
51 minute ago
1 hours ago