2025 மே 14, புதன்கிழமை

குடிநீர் விநியோகம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 11 கிராமங்களுக்கு நாளாந்தம் 32,000 லீற்றர் குடிநீரை தமது பிரதேச சபை மூலமாக விநியோகித்து வருவதாக போரதீவுப்பற்று பிரதேச சபைச்; செயலாளர் எஸ்.குபேரன் தெரிவித்தார்.

இது தவிர பாடசாலைகள், பிரதேச செயலகம், சுகாதார நிலையங்கள் ஆகியவற்றுக்கு வாராந்தம் 7,000 லீற்றர் குடிநீரை விநியோகித்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கிராமங்களில் தற்போது நிலவும் வரட்சி காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, பொதுமக்கள் குடிநீர்த் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர். இதைக் கருத்திற்கொண்டு பொதுமக்களுக்கு குடிநீரை விநியோகித்து வருவதாகவும் அவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X