Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதேசத்தின் தர்மபுரம் கிராமத்திலுள்ள தமது காணியை பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து அத்துமீறி; வேலி அடைப்பதாகவும் இக்காணிக்கு இவ்வாறு வேலி அடைக்கப்படுவதை உடனடியாக தடுத்துநிறுத்துமாறும் கோரி மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று புதன்கிழமை ஒன்றுகூடி அக்கிராம மக்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.
400 ஏக்கருடைய இக்காணியில் 60 ஏக்கருக்கு பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிலரினால் அத்துமீறி வேலி அடைக்கப்பட்டு வருவருடன், இதற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதாகவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
இக்காணி தமிழருக்குச் சொந்தமானதென்பதுடன், இக்காணியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாகவும் அம்மக்கள் கூறினர். எனவே, தமது காணி பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிலரினால் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்குமாறு இம்மக்கள் கோரியுள்ளனர்.
இதன்போது எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மக்களின் பிரச்சினை தொடர்பில் கேட்டறிந்த மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், உங்களின் காணிக்குரிய ஆதாரங்கள் இருப்பின், நீதிமன்றத்துக்குச் சென்று அதை நிரூபிக்குமாறும் அல்லது காணிக்குரிய சொந்தக்காரார்கள் இருப்பின் அவர்கள் நீதிமன்றத்துக்குச் செல்லுமாறும் தெரிவித்ததாக பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
1 hours ago
2 hours ago