Suganthini Ratnam / 2017 ஜனவரி 16 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்,ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணத்தில் காணப்படும் காணிப் பிணக்குகளுக்கு சட்டத்தால் மாத்திரம் தீர்வு வழங்க முடியாது என்பதுடன், பிரச்சினைகள் என்று கண்டறியப்படும் விடயங்களுக்குச் சரியான நியாயம் கண்டறியப்பட்டு அதன் அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
காணிப் பிணக்குகளைத் தீர்ப்பது தொடர்பான நடமாடும் சேவை, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை கட்டடத்தில் இன்று (16) திங்கட்கிழமை நடைபெற்றது. அங்கு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,
'வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவான காணிப் பிணக்குகள் காணப்படுகின்றன. காணிப் பிணக்குகள் சிலவற்றுக்குச் சட்டம் தீர்வு தராது. இவ்வாறான விடயங்களுக்கு நியாயம் தேடி கண்டறியப்பட வேண்டும்' என்றார்.
'காணி தொடர்பாக இயற்றப்படும் சட்டங்களை துஷ்;பிரயோகம் செய்யும் பலர், சட்டத்தின் ஓட்டைக்குள் நுழைந்துகொண்டு, தாங்கள் உரித்துடையவர்கள் என்று கூறுகின்றார்கள். இவ்வாறான நிலைமையில், சரியான முறையில் ஆராய்ந்து பரிகாரம் வழங்க வேண்டும்.
எமது பிரதேசங்களைப் பொறுத்தவரையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வீடுகள் வழங்கப்பட்ட நிலையில், காணி உறுதிகள் வழங்கப்படாமல் பலர் உள்ளனர். பலர் ஒப்பங்கள் வைத்திருக்கின்றார்கள். அவர்களுடைய பிரச்சினை உள்ளது, ஏற்கெனவே மேய்ச்சல் தரையாக இருந்த இடங்கள், குடியிருப்புகளாக மாறியுள்ளன. இவ்வாறான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மேய்ச்சல் தரையாகத் தீர்மானிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட வேண்டும்.
மட்டக்களப்பில் ஆகக் குறைந்தாக 25 சதவீதமான காடு தேவைப்படும் போதிலும், தற்போது 14 சதவீதமான காடு மாத்திரமே காணப்படுகின்றது. மேலும், காடுகளை அழித்து புதிதாக இடங்களை நாம்; உருவாக்க முடியாது. இருக்கின்ற காணிகளுக்குள்ளே நாம் தீர்வு காண வேண்டும். காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்க வேண்டும் என்பது சட்டம். தயவுசெய்து காணி உள்ளவர்கள் வேறு வழிகளைக் கொண்டு காணிகளைப் பெற்றுவிடுவோம் என்று வேலை செய்ய வேண்டாம்' என்றார்.
30 minute ago
30 minute ago
40 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
30 minute ago
40 minute ago
49 minute ago