Princiya Dixci / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா
காணாமலாக்கப்பட்ட குடும்பத்தவர்களின் அவல வாழ்வுக்கு மிக விரைவில் தீர்வு கண்டாக வேண்டும் என நிலமை மிகவும் அவலமானவை இவற்றுக்கான தீர்வுகள் வெகு விரைவில் கொண்டுவரப்படும் என தான் நம்புவதாக கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், அரச ஆடு மரபுரிமை வள மேம்பாட்டு நிலையம் மட்டக்களப்பு-தும்பங்கேணியில் செவ்வாய்க்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஆளுநர்,
“இந்த விடயத்தில் பெரும்பாலானவர்கள் பரந்த மனப்பாங்குடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
50 வருடங்களுக்கு முன்னர் இப்பரதேசத்தில் நான் கடமையாற்றியிருந்தேன். மட்டக்களப்பு கச்சேரியில் தேர்தல் அதிகாரியாக நான் கடமையாற்றியபோது ஒவ்வொரு கிராமங்களுக்கும் செல்வதுண்டு. அதனால் இங்கள்ள கிராம மக்களின் கஷ்டமான வாழ்க்கை நிலை பற்றி எனக்கு நன்கு தெரியும்.
நீங்கள் ஒருவரும் பார்த்திராத மக்கள் அகதி முகாம்களில் அனுபவித்திருக்கும் கஷ்டங்களை நான் பார்த்திருக்கின்றேன். யுத்தம் ஏற்படத்திய கொடுமையான பாதிப்புக்கள் பற்றி அனுபவ ரீதியாக நான் நன்கு அறிவேன்.
தற்போது மாற்றங்களே உடனடியாக தேவைப்படுகின்றன. இக்காலகட்டத்தில் மக்கள் மத்தியில் பல அபிவிருத்திகளும் தேவையாகவுள்ளது.
சம்பூர் மக்களின் நிலத்தை வழங்க ஏற்பாடு செய்தேன். அதுபோல் மீள்குடியேற்றங்களும் வெகு விரைவில் செய்யப்பட வேண்டும்.
உண்மைகளைக் கண்டறியும் குழுவின் அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படுமென நம்புகின்றேன்.
நான் அரசியல்வாதியல்ல. ஆனாலும், பல அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றேன். கிராம இராச்சியக் கொள்கைக்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன அவை வெகுவிரைவில் அமுலாகும் என எதிர்பார்கின்றேன்” என்றார்.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago