2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடியில் உரிமை கோராத கார் மீட்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 22 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

காத்தான்குடி -02, கபுறடி வீதியோரத்தில் கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தொடர்பில் எவரும் உரிமை கோராத நிலையில் அக்காரை வெள்ளிக்கிழமை  பொலிஸார் மீட்டுள்ளனர்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய பொதுமக்கள், தமக்குத் தகவல் வழங்கினர். இதனை அடுத்து, உரிய இடத்துக்குச் சென்று அக்காரை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், அக்கார் பற்றிய விவரத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின்; இணையத்தில் தேடியதாகவும் இதன்போது, ஓட்டமாவடியைச் சேர்ந்த ஒருவரின் பெயரில்  அக்கார் பதிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X